இதோ...வாய் துர்நாற்றத்திற்கு பிரத்தியேக சிகிச்சை.!

Published By: Robert

03 May, 2016 | 09:44 AM
image

சிலரிடம் நாம் சாதாரணமாக இந்த முகவரி எங்கேயிருக்கிறது என்று கேட்கும் போதோ அல்லது மணி என்ன என கேட்டுவிட்டு அவர் பதில் கூறும் போதோ அல்லது சில வேண்டாத விருந்தாளிகள் வீணாக வந்து வலியப் பேசும் போதோ அவர்களின் வாயில் இருந்து துர்நாற்றம் வீசும். நாம் இதற்கு உடனடியாக எதிர்வினை செய் வோம். ஆனால் அவர்களுக்கு அது தெரியாது. புரியாது. ஒரு சிலர் அவர்களை நண்பர்களாக்கி, உங்கள் வாயிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது என்று அக்கறையுடன் கூறுவர். ஆனால் அதை அவர்கள் அலட் சியப்படுத்திவிட்டு செல்வர். இந்நிலையில் எமக்கு உண்மையிலேயே சந்தேகம் வந்துவிடும். வாய் துர்நாற்றம் வீசு­வது ஏன் என்று. இதற்கான விளக்கத்தைப் பெற சென்னை யில் பிரபலமாக இருக்கும் பல் மருத்துவ நிபுணர் டாக்டர் ஹரிஹரனைச் சந்தித்து விளக்கம் கேட்டோம்.

வாய் துர்நாற்றத்திற்கான காரணம் என்ன?

பொதுவாக வாயின் துர்நாற்றத்திற்கு பல காரணங்கள் இருக்கின்றன. கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் எம்முடைய வாயில் பெருகிக்கொண்டே இருப்பது, உணவு சாப் பிட்ட பின் வாயை சுத்தமாக கழுவாமல் இருப்பது, பற்களில் ஏற்படும் சிதைவு, பற்குழிகள் மற்றும் ஈறுகளில் வரும் நோய்கள் என பல காரணங்களை முன்வைக்கலாம்.

ஒரு சிலருக்கு வாய் துர்நாற்றம் எப்போதாவது வந்து போகலாம். ஒரு சிலருக்கு இது மீண்டும் மீண்டும் வரக்கூடியதாக இருக்கும். இதில் ஒரு உண்மை என்னவெனில் ஒருவருக்கு வாய் துர்நாற்றம் இருக்கிறது என்ப தே அவருக்கு தெரியவருவ தில்லை. எதிரில் பேசு பவர் செய்யும் எதிர் வினையிலிருந்து தான் தெரியவரும். இதற்கு எளிமையான சிகிச்சை என்னவெனில் வாய்க் குழியை எப்போதும் சுத்த மாக வைத்திருப்பது தான்.

வாய்க்குழியில் உள்ள பற்கள், ஈறுகள், நாக்கு ஆகிய வற்றை சுத்தமாக பராமரித்து வந்தால் போதுமானது. உணவின் சிறு துண்டுகள் பற்களிடையே தங்கிவிடு வதாலும் கூட அங்கு பாக்டீரியாக்கள் தோன்றி விடும். வாயில் சுரக்கும் உமிழ்நீர் வாயை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்கிறது. பாக்டீரியாக்கள் வெளியிடும் அமிலங்களை சமப்படுத்தி சுத்தப்படுத்துகிறது. அத்துடன் வாய்க்குள் சேரும் இறந்த செல்களையும் சுத் தப்படுத்துகிறது. அப்படி செய்யாவிட்டால் இறந்த செல்கள் அழுகி துர்நாற்றத்தை உண்டாக்கும். பல்வேறு மருந்துகள் உட்கொள்வதாலும், உமிழ்நீர் சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகளாலும், வாய் வழியாக சுவாசிப்பதாலும், நிமோனியா பாதிப்பாலும், பிராங்கைடீஸ் மற்றும் சைனஸ் பாதிப்பாலும், நீரிழிவு, ஈரல் மற்றும் சிறுநீரக கோளாறுகள் மற்றும் எதுக்களிப்பாலும் வாய் துர்நாற்றம் அடையும்.

வேறு சிலருக்கு தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டால் கூட வாய் துர்நாற்றம் வீசும். உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள், ஒரு வழிப்பாதையான உணவுக்குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி வந்துச் செல்லும். இதனாலும் கூட வாய் துர் நாற்றம் ஏற்படக்கூடும்.

உணவுக்குழாய் வழியாக வயிற்றுக்குள் சென்ற உணவானது நான்கு மணி நேரத்தில் ஜீரணமாகிவிடும். நான்கு மணி நேரத்திற்கு மேலும் ஜீரணமாகாத உணவுகள் உணவு மண்டலத்திலேயே தங்க நேரிடும் போது, வயிற்றில் உருவாகும் புளித்த நாற்றம் வாய் வழியாக வந்து சேரும். அதே சமயத்தில் அல்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட வாய் துர்நாற்றம் ஏற்படும்.

புகை பிடித்தல் மற்றும் புகையிலைப் பொருட்கள் மெல்லுதல் பான் பராக் பழக் கங்கள் ஆகியவற்றால் பற்களில் கறை ஏற்பட்டு இவை நாளடைவில் வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும். ஒரு சிலருக்கு உடலில் நீர்ச்சத்து இயல்பை விட குறைவாக இருந்தாலும் வாயிலிருந்து துர்நாற்றம் வீசக்கூடும்.

ஒவ்வொருவரின் வாயிலும் குடியிருக்கும் நுண்கிருமிகள் பிராண வாயு அல்லாத சமயங்களிலும் பெருகுவதாலும், அவை வெளியேற்றும் கழிவுகளாலும் கூட வாயில் துர்நாற்றம் வீசும். ஏனெனில் இவை வெளி யிடும் கழிவுகளில் ஆவியாகக்கூடிய கந்தகக் கூட்டுப்பொருள்கள் இருக்கின்றன.

வேறு சிலருக்கு அரிதாக அழுகிய முட்டையிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் போலவும், குப்பை கிடங்குகளிலிருந்து வெளி யேறும் துர்நாற்றத்தைப் போல வும், கடல் புறங்களிலிருந்து வெளியாகும் துர்நாற்றம் போலவும், வாயிலுள்ள நுண்கிருமிகளின் கழிவு

களிலிருந்து துர்நாற்றம் வெளி யேறுகின்றது. இதனை மருத்துவ ரீதியாக VolatileSulfur Compound என்று அழைப்பார்கள்.

வாய் துர்நாற்றத்தை போக்க ஏதேனும் பிரத்தியேக சிகிச்சை இருக்கிறதா?

வாயை சுத்தமாக வைத் திருப்பதே இதற்கான பிரத்தியேக சிகிச்சை. இது கேட்பதற்கு எளிதாக இருக்கும். ஆனால் நடை முறைப்படுத்துவதில் தான் பிரத்தியேகமான கவனம் தேவை. வாயை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கவேண்டும். வாயை சுத்தமான தண்ணீரால் கழுவி கொப்பளிக்கவேண்டும். ஒரு சிலருக்கு வாயை சுத்தமாக வைத்திருந்தாலும் அசைவ உணவை தொடர்ந்து சாப்பிடுவதாலும், வேறு சில காரணங்களாலும் இவர்களின் வாயில் இருந்து தொடர்ந்து நுண்கிருமிகளின் உற்பத்தி இருந்து கொண்டேயிருக்கும். இதனை சமப்படுத்தவேண்டும் என்றால் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மவுத் வாஷ் எனப்படும் வாய் கொப்பளிக்கும் மருந்தை பயன்படுத்தவேண்டும். இரவிலும் வாய் உலராதபடிப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மூலிகைகளால் ஆன சூயிங்கத்தை மெல்லலாம். கரட்டை நன்றாக கடித்து சாப் பிடலாம். ஒரு சிலர் வாயில் செயற்கையான பல்செட்டைக் கட்டியிருந்தால் அதனை தினமும் எடுத்து சுத்தப்படுத்தியபின்பே பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பெரிய வர்களாக இருந்தால் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கட்டாயமாக பற்தூரி­கையை மாற்றிவிடவேண்டும்.

இவை யெல்லாவற்றையும் விட போது மான அளவிற்கு அதாவது தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் அருந்தவேண்டும்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் : 0091 44 24342452 மற்றும் அலைபேசி எண் : 0091 9841094195 மற்றும் மின்னஞ்சல் முகவரி dentisthari@gmail.com

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தினமும் உணவில் நெய் சேர்ப்பது உடலுக்கு...

2023-12-09 18:58:12
news-image

உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கா?

2023-12-08 16:38:54
news-image

முளைகட்டிய தானியங்களை சாப்பிடுபவர்களா நீங்கள்.? இதோ...

2023-12-06 20:20:05
news-image

புற்றுநோய் அறிகுறிகளில் அலட்சியம் வேண்டாம்!

2023-12-05 17:55:17
news-image

மருதாணி போட்டுகொள்ளப் போகிறீர்களா?

2023-12-04 16:42:05
news-image

புற்றுநோய்க்கு மருந்தாகுமா தேன்?

2023-12-02 12:38:53
news-image

‘குட்நைட்’ சொல்லப் பயமா?

2023-11-28 14:29:14
news-image

என்ட்டி பயோட்டிக்: ஹீரோவா, வில்லனா?

2023-11-25 16:33:21
news-image

நீரழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்,...

2023-11-24 17:22:53
news-image

தொப்பையைக் குறைக்க வேண்டுமா?

2023-11-24 10:50:35
news-image

நீரிழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு நிலையில் நீங்கள்...

2023-11-23 10:20:11
news-image

பெண்களை குறிவைக்கும் குதிக்கால் வலி!

2023-11-22 16:47:04