கொழும்பை அண்டிய பகுதிகளில் இலகுரயில் சேவை தொடங்குவதற்கான ரயில் பாதை அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கடுவலையில் இருந்து, கொழும்பு - கோட்டை வரையிலான ரயில் பாதை அமைக்கும் பணிகள் எதிர்வரும் ஜுலை மாதம்  5ம் திகதி ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அத்துருகிரிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.