நடிகர், கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக்பொஸ் 3வது சீசன் நிகழ்ச்சி 15 போட்டியாளர்களுடன் நேற்று ஆரம்பித்துள்ளது. இந்நிலையில்,  தமிழ் பிக்பொஸ் நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த இரு போட்டியாளர்கள் பங்குபற்றியுள்ளமையானது, இலங்கைவாழ் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதுடன், அனைவரின் பார்வையும் குறித்த நிகழ்ச்சி மீதும், இரு போட்டியாளர்கள் பக்கமும் சாய்ந்துள்ளது. அந்தவகையில், முதலாவதாக செய்தி வாசிப்பாளர் களமிறங்கியிருக்கும் போட்டியாளர் லொஸ்லியாவை பற்றி பார்ப்போம்.

செய்தி வாசிப்பாளர் லொஸ்லியா

இரண்டாவது போட்டியாளராக  நேற்று அறிமுகஞ்செய்யப்பட்ட இலங்கையின் பிரபல தொலைக்காட்சியொன்றில், செய்தி வாசிப்பாளர் லொஸ்லியா பிக்பொஸ் சீசன் 3ன் போட்டியாளராக கலந்து கொள்கிறார். 

இவர் கிளிநொச்சியில் பிறந்து, திருகோணமலையில் தனது கல்வியை தொடர்ந்து கொழும்பில் பிரபல தொலைகாட்சி நிறுவனத்தில்  செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

இவர், பாடசாலை கல்வியை  முடித்த பின் பல்கலைக்கழகம் செல்வது கடினம் என்பதால் தாமே வேலையை தேடலாம் என தொடங்கிய போது தனக்கு கிடைத்த ஊடகத்துறை வாய்ப்பை பயன்படுத்தி கொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியதாவது, சிறுவயதில் இலங்கை போரின் போது புலம்பெயர வேண்டிய நிலை வந்தது. எங்கள் வீட்டில் 4 பெண்கள். எங்கள் தந்தை மிகவும் அன்பாக மிக சிறப்பாக எங்களை வளர்த்தார். இந்நிலையில், வேலை நிமித்தம் எனது அப்பா வெளிநாடு சென்றுவிட்டார். தற்போது பிக்பொஸ் நிகழ்ச்சி வாயிலாக என்னை தினமும் அப்பா பார்ப்பார் என நம்புகிறேன் என்றார். மேலும், பல்வேறு இடர்பாடுகளிடையே எனக்கு விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது என தெரிவித்துள்ளார். 
 
இதனைத் தொடர்ந்து, களமிறங்கியிருக்கும்  அடுத்த போட்டியாளர் மொடல் தர்ஷனை பற்றி பார்ப்போம்.

மொடல் தர்ஷன் தியாகராஜா
இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். இலங்கையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொருளியலாளராக (Software Engineer) பணிபுரிந்துள்ளார்.

2014 ஆண்டு இன்டர்நெஷனல் மிஸ்டர் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்டுள்ளார். மேலும், "வேறென்ன வேண்டும்"  என்ற படத்தில் நடித்துள்ளார். "நீ போன பின்னால்... என்ற ஆல்பத்திலும் நடித்துள்ளார். அத்தோடு நகை கடை விளம்பரத்தில்  நடித்துள்ளார்.

மேலும், சமீபத்தில் " நீ பற்ற வைத்த நெருப்பொன்று" என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் பிக்பொஸ்  நிகழ்ச்சியில் மிகவும் அழகானதும், இளம் போட்டியாளருமாவார்.

மேலும், தமிழ் பிக்பொஸ் 3வது சீசன் நிகழ்ச்சியில் பங்குபற்றியிருக்கும்  போட்டியாளர்களை பற்றி பார்க்கலாம். 

செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு

நடிகை சாக்ஷி அகர்வால்

நடிகை மதுமிதா

நடிகர் கவின்

மொடல் அபிராமி

நடிகர் சரவணன்

நடிகை வனிதா

இயக்குனர் சேரன்

நடிகை ஷெரின்

பரத நாட்டிய கலைஞர் மோகன் வைத்யா

நடனர் இயக்குநர் சாண்டி

பாடகர் முகென் ராவ்

தொகுப்பாளர் ரேஷ்மா