சட்டவிரோத தங்கத்தை  கடத்த முற்பட்ட 6 இந்திய பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாராநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் குறித்த நபர்களின் பொதிகளை சோதனையிட்டப்போது தங்கக்கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விமானநிலைய சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் இருந்து சென்னைக்கு குறித்த தங்கக்கட்டிகளை கடத்தும் நோக்கில் அவர்கள் இருந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.