ஈரானிய ஆயுத முறைமைகள் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல்

Published By: R. Kalaichelvan

24 Jun, 2019 | 10:57 AM
image

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் ஈரா­னுக்கு எதி­ராக வான் தாக்­கு­தல்­க­ளை­ ந­டத்­து­வ­தற்­கான திட்­டத்தை கைவிட்­டி­ருந்த நிலையில்  அந்­நாட்டு ஆயுத  முறை­மைகள் மீது இணைய­தளம் மூல­மான சைபர் தாக்­கு­த­லொன்றை   ஆரம்­பித்­துள்ளதாக  அமெ­ரிக் கா­வி­லி­ருந்து நேற்று ஞாயிற்­றுக்­கிழமை  வெளியா­கி­யுள்ள அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன.

அந்த சைபர் தாக்­கு­த­லா­னது  ஈரானின் ஏவு­கணை மற்றும்  ஏவு­க­ணையை ஏவும்  உப­க­ர­ணங்கள் என்­ப­வற்றைக் கட்­டுப்­ப­டுத்தும் கணினி முறை­மை­களை  செய­லி­ழக்க வைக்கும் வகையில் மேற்கொள்­ளப்­பட்­ட­தாக  வாஷிங்டன் போஸ்ட் பத்­திரிகை செய்தி வெளியிட்­டுள்­ளது.

எண்ணெய் தாங்கிக் கப்­பல்கள்  மீது  ஈரானால் நடத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும் தாக்­குதல் மற்றும்  அந்­நாட்டால் அமெ­ரிக்க  ஆளற்ற விமானம் சுட்டு வீழ்த்­தப்­பட்­டமை என்­ப­வற்­றுக்கு பதி­லடி நட­வ­டிக்­கை­யா­கவே இந்த சைபர் தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தாக  நியூயோர்க் டைம்ஸ் ஊடகம் தெரி­விக்­கி­றது. 

அமெ­ரிக்க ஆளற்ற விமானம் சுட்டு வீழ்த்­தப்­பட்­டமை  ஈரா­னிய எல்­லை­களை மீறு­வது தொடர்பில் அமெ­ரிக்­கா­வுக்­கான ஒரு சிவப்பு எச்­சரிக்கை என  ஈரா­னிய இஸ்­லா­மிய புரட்­சி­கர காவல் படை கூறுகிறது.

அந்த ஆளற்ற விமா­னத்துக்கு அருகில்  35 பேர் வரை­யா­னோரை  ஏற்­றிச் செல்லக் கூடிய இரா­ணுவ விமா­ன­மொன்றும் பறந்­த­தா­கவும் அதனையும் தாம் சுட்டு வீழ்த்­தி­யி­ருக்க  முடியும் எனவும் ஆனால் தாம் அதனைச் செய்­ய­வில்லை  எனவும் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் உயர் மட்ட அதிகாரியான அமீர் அலி  ஹஜிஸ்டெல்லாஹ் குறிப்பிட் டிருந்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47