ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இலத்திரனியல் முறைமூலம்  தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கான கருத்தமர்வு ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த கருத்தமர்வு  நேற்று (23) முல்லைத்தீவு உண்ணாப்புலவு பகுதியில் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளரும் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினருமான அன்ரனி றங்கதுசார தiலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது இனிவரும் காலங்களில் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச யாரை தேர்ந்தெடுகின்றாரோ  அவருக்கு உதவி செய்வேண்டும் என்றும் இனம் மதம் மொழிகடந்து நாட்டிற்காக ஒற்றுமையுடன் சேவை செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்று அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட பிரதிநிதிகள் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவை    சந்தித்த போது அவர் வலியுறுத்தியுள்ளதாக கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் அன்ரனி றங்கதுசார தெரிவித்துள்ளார்.

இதன்போது இனிவரும் காலங்களில் இலத்திரனியல் தொழில் நுட்பத்திற்கு அமைவாக தேர்தல்  பிரசாரம்  செய்வதற்கு கட்சியின் ஆதரவாளர்களுக்கு  பொதுஜனபெரமுன கட்சியின் தொலைபேசிசெயலி (app)  அறிமுகம்படுத்தப்பட்டு அதன் பாவனை தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தல் பிரசார செயலி அறிமுகம் செய்து விளக்கமளிக்கும் செயலமர்வு நேற்று (23) நாடுமுழுவதும் 160 இடங்களில் நடைபெற்றுள்ளது . இந்த செயலின்மூலம் பொதுசன பெரமுனவின் பிரசாரத்துக்கு செல்பவர்கள் பிரசார பணிகளை செய்வதோடு பொதுசன பெரமுனவுக்கு கிடைக்க போகும் வாக்குகளை துல்லியமாக கணிப்பிடக்கூடியவையில் இந்த செயலி வடிமைக்கப்பட்டுள்ளதாக செயலமர்வுக்கு வருகை தந்த வளவாளர் கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் விளக்கமளித்தார் .

இந்த கருத்தமர்வில் வன்னிமாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் கட்சியின் பொறியியலாளர் குழு தலைவர் மாதவ, மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த அமைப்பாளர்கள்,கட்சி தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.