தமிழ் அர­சியல் கைதி முத்­தையா  ச­கா­தேவன் சுக­யீனம் கார­ண­மாக மர­ண­மானார் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

14 வரு­டங்­க­ளாக சிறைக் கைதி­யாக இருந்த இவர் சுக­யீனம் கார­ண­மாக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்கப் பட்­டி­ருந்­த­போதே இந்த மரணம் சம்­ப­வித்­துள்­ளது. முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்­காமர் கொலை வழக்கில் சம்­பந்­தப்­பட்­ட­தாக இவர் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

இவ­ருக்கு எதி­ரான வழக்கு விசா­ர­ணைகள் இழுத்­த­டிக்­கப்­பட்டு கால தாமதம் அடைந்­தி­ருந்­ததால், உடல் ரீதி­யா­கவும் உள­வியல்  ரீதி­யா­கவும் இவர் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த தாக இவ­ரது உற­வி­னர்கள் தெரி­வித்­துள்­ள னர். இரண்டு பிள்­ளை­களின் தந்தையாகிய இவர் கொழும்பு தெமட்டகொடையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.