ஏறாவூர் சவுக்கடி கடற்கரையோரப் பகுதியில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் இயல்பு நிலையைக் குழப்பி வன்முறைக்குத் இடமளிக்கும் வகையில் செயற்பட்டதாகக் கருதப்படும் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இயல்பு நிலையைக் குழப்பும் வகையில் பல்வேறுபட்ட வதந்திகளைப் பரப்பி வன்முறைக்குத் தூபமிட்டபோதும் பிரதேச தமிழ் முஸ்லிம் மக்களின் பூரண ஒத்துழைப்பினால் நிலைமையை இயல்பாகவும் அமைதியாகவும் வைத்திருக்க முடிந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை சவுக்கடி கடற்கரையோரமாக இளைஞர்கள் இருவர் வேகக் கட்டுப்பாட்டை மீறிச் சென்றுகொண்டிருந்துள்ளனர்.
அப்பொழுது அவ்வீதியருகே நின்றிருந்த கே. தயாகரன் (வயது 30) என்பவர் மீது அதிவேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதனால் அவர் ஸ்தலத்திலேயே பலியானார்.
இச்சம்பவத்தைக் கண்டதும் ஆத்திரமுற்ற இளைஞர்கள் சிலர் திரண்டு மோட்டார் சைக்கிளில் சென்று விபத்தை ஏற்படுத்திய இளைஞர்களைத் தாக்கி படுகாயமடையச் செய்துள்ளனர்.
காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சை பெற்றுவரும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தின் எதிரொலியாக இன்னொருவர் மீராகேணிப் பகுதியில் வைத்துத் தாக்கப்பட்டுள்ளார்.
இவ்விரு சம்பவங்களிலும் ஈடுபட்டதாகக் கருதப்படும் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆஜர் செய்யப்பட்டபோது அவர்களை எதிர்வரும் ஜுலை 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சனிக்கிழமை மாலை 22.06.2019 காணாமல் போனதாகக் கூறப்பட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்ட ஒருவர் ஞாயிற்றுக்கிழமை சவுக்கடி கடற்கரையோரமாக வைத்து கண்டு பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவங்களைத் தொடர்ந்து நிலைமையை சுமுகமாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏறாவூர் தளவாய், சவுக்கடி, புன்னைக்குடா கடற் கரையோரப் பகுதிகளில் ஏறாவூர் பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரைக் கொண்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM