(நா.தினுஷா)

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான இந்த ஆட்சியை இந்த ஆண்டுடன் கவிழ்த்து விடலாம் என்ற  எதிரணியின் எதிர்பார்ப்பு தோல்வியடைந்துள்ளது எனத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஆட்சியை கவிழ்ப்பதற்காகவே எதிர்தரப்பு நாட்டின் இனவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குவதாகவும் குற்றஞ்சாட்டினார். 

இவ்வாறானவொரு சூழ்நிலையில்  எதிர்வரும் தேர்தலில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தை சேரந்தவர்கள் சிலர் வேட்பாளராக செயற்படவும் உள்ளனர்.  அரசாங்கத்துக்கு ஆதராவாக செயற்படும் பிரபல்யமான அமைச்சர்கள் யாராவது இருந்தால் அவர்களக்கு  எதிராக  செயற்படுவதே இவர்களின் பிரதான நோக்கமாக காணப்படுகிறது. 

அரசாங்கத்துக்க எதிரான எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும் சர்வதேச உதவிகள் எமக்கு கிடைத்த வண்ணமே உள்ளது. ஜப்பான் , இந்தியா ஆகிய நாடுகள்  பொருளாதார ரீதியில் பாரிய உதவிகளை வழங்கியுள்ளன.  இந்த இரண்டு நாடுகளும் குறைந்த வட்டி வீதத்தில் எமக்கு கடன் உதவிகளை வழங்கியுள்ளன. ஆகவே இந்த அரசாங்கத்தை பற்றி எமது மக்கள் என்ன கூறினாலும்  சர்வதேசம் கடந்த அரசாங்கத்தை விட  தற்போதைய அரசாங்கத்தை சிறந்த அரசாங்கமாக கருதுகிறது என்றும் குறிப்பிட்டார்.