நாம் இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களில் காலூன்றியுள்ளோம் : அமைச்சர் மனோ

30 Nov, 2015 | 11:47 AM
image

இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ள எமது இந்த அலுவகங்கள், இம்மாவட்டங்களின் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த மாவட்ட செயலகங்கள் ஆகும். இந்த செயலகங்கள் மூலமாக அரசியல், தொழிற்சங்க தலைமைகளை நேரடியாக வழங்கி, இந்த மாவட்ட தமிழ் மக்களை அரவணைக்க நான் முடிவு செய்துள்ளேன்.

இதற்கான ஒருங்கிணைப்பை முன்னெடுப்பது, ஜனநாயக மக்கள் முன்னணியின்  இரத்தினபுரி, களுத்துறை மாவட்ட செயலாளர்களின் தலையாய கடமைகளாகும். இதன்மூலம் இன்று நாம்  இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களில் நாம் இப்போது காலூன்றியுள்ளோம் என ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ்-ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.   

இல.10, பட்டியோவிட வீதி, இரத்தினபுரி நகரிலும், இல. 23, கொஸ்வத்தைகொடை வீதி, மத்துகம நகரிலும் ஜ.தொ.கா., ஜ.ம.மு., தமுகூ அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயலகங்கள், அமைச்சர் மனோ கணேசனால், திறந்து வைக்கப்பட்டுள்ளன.

ஜ.ம.மு. அமைப்பு செயலாளர் சண் பிரபாகரன், இரத்தினபுரி மாவட்ட செயலாளர் சந்திரகுமார், களுத்துறை மாவட்ட செயலாளர் சிவராஜா ஆகியோர் உட்பட  பெருந்தொகையான ஆதரவாளர்கள் கலந்துக்கொண்ட இந்நிகழ்வுகளில் மேலும் உரையாற்றிய அமைச்சர் மனோ கணேசன் கூறியதாவது,      

மலையகம் என்ற அடைமொழிக்குள்ளே மத்திய மாகாணத்தையும், மேலகம் என்ற அடைமொழிக்குள்ளே கொழும்பு, கம்பஹா மாவட்டங்களையும்  மாத்திரம் சமகால வரலாறு நடைமுறையில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இதன்மூலம், உரிய தேசிய அவதானத்தை  இரத்தினபுரி, களுத்துறை மற்றும் கேகாலை மாவட்டங்கள் பெறத்தவறியுள்ளன.

இந்த வரலாற்று குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய வேண்டியது, எனது கடமையாகும். நமது ஜனநாயக தொழிலாளர் காங்கிரசுக்கு, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்கள் உள்ளடங்கிய சப்ரகமுவ மாகாணத்திலும், களுத்துறையிலும் பாரிய தொழிற்சங்க வரலாறு உண்டு.

நான் வளர்ந்தது கண்டியாக இருந்தாலும், நான் பிறந்தது  சப்ரகமுவ மாகாணத்தின், கேகாலை மாவட்ட, எட்டியாந்தோட்டை ஆகும். எனவே எனக்கு இந்த பிரதேசம் தொடர்பில் விசேட அக்கறை உண்டு. சமகாலத்தில் 2003 ஆண்டுகளில் இருந்து நமது அரசியல் நடவடிக்கைகளை இம்மாவட்டங்களில் நாம் முன்னேடுத்தோம்.

ஆனால், வடக்கில் நடைபெற்ற யுத்தம் காரணமாகவும், அதனுடன் தொடர்புபட்டு தென்னிலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவின் அரச பயங்கரவாதம் காரணமாகவும், நமது அரசியல் நடவடிக்கைகளை இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை மாவட்டங்களில் பெரிய அளவில் முன்னெடுக்க நான் விரும்பியிருக்கவில்லை. அப்படி செய்து அதன்மூலம், இங்கு வாழும் நமது ஆதரவாளர்களை, கஷ்டத்தில் தள்ளக்கூடாது என்ற பொறுப்புள்ள முடிவை நான் அப்போது எடுத்திருந்தேன்.  

எங்களது இடைவிடா போராட்டங்களின் மூலமாக இன்று காலம் மாறியுள்ளது. மகிந்த  ராஜபக்சவின் நேரடியான அரச பயங்கரவாத அராஜகம் இன்று இல்லை. ஆட்சியாளரின்  நேரடி ஆசீர்வாதத்துடன், இனவாத சக்திகள் தமிழ் மக்களுக்கு எதிராக எதிராக  முன்னெடுத்த வெளிப்படையான இனவாதத்தை இன்று முடிவுக்கு  கொண்டு வந்துள்ளோம்.

அதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் துணை போன அரசாங்க நிர்வாக, பொலிஸ், இராணுவ போக்குகளையும் நாம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். இந்த நிலைமையை ஏற்படுத்த உயிராபத்துமிக்க மிக்க சூழலில், பல்வேறு அர்ப்பணிப்புகளுடன் இடைவிடாமல் இந்நாட்டில் தேசியரீதியாக போராடிய முதல் ஐந்து பேரில் நானும் ஒருவன். இந்த உண்மை அரசியல் குருடர்களுக்கு தெரியாவிட்டாலும் கூட  நமது மக்களுக்கு நன்கு தெரியும்.

நமது இனத்துக்கு இன்று எல்லாம் கிடைத்து விடவில்லை. அதற்கான அரசியல், தொழிற்சங்க சூழல்தான் உருவாகியுள்ளது. இந்த நல்ல சூழலை பயன்படுத்தி இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை மாவட்டங்களில் பிறந்து வாழும் எனது மக்களுக்கு பணியாற்றவே ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட எமது அரசியல் அமைப்புகளின் அலுவலகங்கள் இன்று இங்கே திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில், அரசியல், தொழிற்சங்கரீதியாக  வாடகை வீடுகளில் நீங்கள் குடி இருந்தீர்கள். அது இனி போதும். இது உங்கள் சொந்த அரசியல், தொழிற்சங்க வீடு. ஆகவே இங்கு எல்லோரும் வந்து சேர்ந்து கொள்ளுங்கள். சில்லறை முரண்பாடுகளை மறந்து விடுங்கள். அனைவரும் ஒன்று சேருவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16