கூகுளின் ஜிமெயில் குறிப்பாக அலுவலக செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் வசதியாகும். இவ் மின்னஞ்சலில் கூகுள் நிறுவனம் ஜூலை 2ஆ திகதி முதல் புதிய வசதி ஒன்றை கொண்டு வருகின்றது கூகுள் நிறுவனம்.

இதுவரை ஒரு தடைவையில் ஒரு மின்னஞ்சலை மட்டுமே பார்பதற்கும் பதில் அனுப்பும் வகையிலும் இயங்கிவந்த இந்த மின்னஞ்சல் தளம் தற்போது பல மின்னஞ்சல்களை ஒரேதடவையில் பார்வையிடவும் பதில் அனுப்பவும் கூடிய வகையில் தமது வசிதியை விரிவுபடுத்த உள்ளது. 

இந்த வசதியின் கீழ் மின்னஞ்சல்கள் சுருக்கமாக சிறிய அளவிலான Chat Box போன்று தோன்றும். அதில் பதில் அனுப்பினால் போதுமானது. இதன் மூலம் ஒரே நேரத்தில் மற்ற மின்னஞ்சலையும் பார்த்துக் கொள்ளலாம், முக்கியமான மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பலாம். ஏற்கனவே இது போன்ற வசதிகள் கூகுளின் Hangout இல் செயல்பட்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது. 

 ஜூலை 2ஆம் திகதி முதல்  நடைமுறைக்கு வர உள்ள இந்த வசதி Dynamic Email Feature என்று அழைக்கப்படுகின்றது. இதன் மூலம் சாதாரண குறுந்தகவல் போன்று மின்னஞ்சல்களையும் கையாள முடியும் என நம்பப்படுகின்றது.

இந் நடைமுறையானது மின்னஞ்சல் செயற்பாடுகளை மேலும் இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்ள வழிவகுக்கும் என்கின்றது கூகுள் நிறுவனம்.

இந்த வசதி முதற்கட்டமாக கூகுள் பீட்டா வெர்ஷனில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், டெஸ்க்டாப் சாதனங்களில் விரைவில் கொண்டு வரப்படுகிறது. ஜிசூட் பயன்படுத்துபவர்களுக்கு இப்போதே இந்த வசதி பயன்படுத்த முடியும். மற்ற பயனாளர்கள் ஜூலை 2ம் திகதி முதல் பயன்படுத்தலாம் என்கிறது இந்த நிறுவனம்.