(செ.தேன்மொழி)

பொகவந்தலாவை பகுதியில் சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீடொன்றில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

சந்தேகநபர் பொகவந்தலாவைச் சேர்ந்த 45 வயதுடையவராவார். இவரிடமிருந்து 84 சட்டவிரோத மதுபான போத்தல்கள் 

பொலிஸார் சந்தேக நபரை எதிர்வரும் செவ்வாய்கிழமை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தி பிணையில் விடுவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.