தீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று இந்த பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும். 

கிழக்கு மாகாண சங்கைக்குரிய தேர்கள் அனைவரும் இவர்களுக்கு தீர்வு கிடைக்கவேண்டுமென ஒன்றிணைத்துள்ளோம்  என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி நடைபெற்றுவரும் உண்ணாவிரத போராட்டத்தின் 6 ஆம் நாளாகிய இன்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உட்பட பல தேர்கள் கலந்து கொண்டு வாக்ககுறுதிளித்ததனை தொடர்ந்து போராட்ட வடிவம் மாற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் உரையாற்றுகையில்

நாங்கள் நினைக்கின்றோம் நாங்கள் போராட்டங்களை நடத்தும் போது அகிம்சை வழிபோராட்டத்தின் இறுதி வடிவந்தான் இந்த உண்ணாவிரத போராட்டமாகும். 

30 வருடமான இந்த பிரதேச செயலக பிரச்சினைக்கு பதிலேதும் வழங்காமல் மடக்கிவைத்துள்ளனர். தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அநிதீக்கு எதிராகவே இந்த உண்ணாவிரம் நடைபெறுகின்றது. இந்த போராட்டமானது நீதியானது அல்ல எனக்கூறி முஸ்லிம் சகோரர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 இந்த பிரச்சினை அனைத்திற்கும் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் அரசியல்வாதிகளே இவர்களின் இரு வேடங்களை களைந்து நாங்கள் அனைவரும் இதற்காக ஒன்றிணைய வேண்டும் ஆவர் தற்போது இந்த பிரச்சினை காரணமாக ஒரு சந்தேக பார்வை ஏற்பட்டுள்ளது. 

கே.டபிள்யூ.தேவநாயகம் காலத்திலpருந்து 13 அமைச்சர்களின் கையில் மாறிமாறி தீர்க்கப்படாமல் இருக்கின்ற இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு உண்ணாவிரதம் இருக்கின்ற உண்ணாவிரதாரிகள் முன்னிலையில்  ஒரு வாக்குறுதியை நான் வழங்குகின்றேன். இந்த பிரதேச செயலகமானது இன்னும் ஒரு சில தினங்களுக்குள் தரமுயர்த்தி தருவேன் என நான் இந்த இடத்தில் உறுதியளிக்கின்றேன்.

இறுதியாக நான் ஒன்றை கூறுகின்றேன் இந்த பிரச்சினையை நாங்கள் தொடர்ந்து நீடிக்ககூடாது இப் பிரச்சினைக்கு  தீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று இந்த பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும். 

இதற்காக கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற சங்கைக்குரிய தேர்கள் அனைவரும் இவர்களுக்கு இத்தீர்வு கிடைக்கவேண்டும் என ஒன்றிணைந்துள்ளார்கள் என்பதனை இத்தால் தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் இதன் போது தெரிவித்திருந்தார்.