விடுதலை புலிகளின் துப்பாக்கிக்கு மஹிந்த ராஜபக்ஷவை இரையாக்க நல்லாட்சி அரசாங்கம் முயற்சித்துள்ளது. இராணுவ பாதுகாப்பை மீள் வழங்காவிடின் பாரிய நெருக்கடிகளை எதிர் கொள்ள நேரிடும் என சுட்டிக்காட்டி மஹிந்த அணியினர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

பிரதமர் மற்றும் ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்று விஜயகலாவுடன் பொங்கல் உண்ணுவதற்கு தேவையான சூழலை மஹிந்த ராஜபக்ஷவே ஏற்படுத்திக் கொடுத்தார். அந்த நன்றி உணர்வை மறந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பழிவாங்குவதற்கு அரசாங்கம் பாதுகாப்பை குறைத்துள்ளது. எனவே அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசாங்கமே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் மஹிந்த அணி குறிப்பிட்டுள்ளது.

ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் மஹிந்த அணியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

(லியோ நிரோஷ தர்ஷன்)