வவுனியாவில் அமைந்துள்ள மின்சாரசபையின் பாரிய மின்பிறப்பாக்கி நிலையத்திற்கு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று வியஜம் மேற்கொண்டார்.

வட பகுதிக்கான மின்சார விநியோகம் மற்றும் பாவனையாளர்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக ஆராயும் நோக்குடனேயே தனது விஜயம் அமைந்திருந்தாக ஊடகவியலாளர்களுக்கு அதன்போது தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் மின்பிறப்பாக்கி நிலையத்தின் மின்விநியோக செயற்பாடுகளை பார்வையிட்ட  அவர் மின் பொறியிலாளர்களுடனும் கலந்துரையாடியிருந்தார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்த தெரிவித்த அவர் மின்சாரசபையின் வட பகுதிக்கு காணப்படும் வெற்றிடங்களை மிக விரைவில் நிரப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.