2019 உலககிண்ண தொடரில் இங்கிலாந்தை தோற்கடித்த இலங்கை அணிக்கு முன்னாள் வீரர்கள் பலர் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

இலங்கை அணியின் மிகச்சிறந்த விளையாட்டு என பாராட்டியுள்ள சச்சின் டெண்டுல்கர் துடுப்பாட்டத்தின் மூலம் சாதிக்க முடியாததை பந்து வீச்சின் மூலம் ஈடுசெய்தனர்  என குறிப்பிட்டுள்ளார்.

மலிங்கவும் சக வீரர்களும் மிகவும் நேர்த்தியாக விளையாடினார்கள் துடுப்பாட்ட வீரர்களை திணறடித்தனர் என தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர் இங்கிலாந்து அணி இந்தியா அவுஸ்திரேலியா தென்னாபிரிக்காவுடன் இனி விளையாடவேண்டியுள்ளதால் உலக கிண்ணப்போட்டிகளில் சில ஆச்சரியங்கள் நிகழக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெற்றி உலக கிண்ணத்தை சுவாரஸ்யமானதாக மாற்றியுள்ளது என சொயிப் அக்தர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் வெற்றியை பாராட்டியுள்ள விவிஎஸ் லக்ஸ்மன் முக்கியமான நெருக்கடியான தருணங்களில் அனுபவம் எவ்வளவு முக்கியம் என்பதை மலிங்கவும் மத்தியுசும் வெளிப்படுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங் சுரேஸ் ரெய்னாவும் இலங்கை அணியை பாராட்டியுள்ளனர்.

உலக கிண்ண தொடர் இந்த வெற்றியின் பின்னர் இறுக்கமானதாக மாறியுள்ளது என சுரேஸ்ரெய்னா ரிவித்துள்ளார்.

லசித்மலிங்க தனஞ்செய டி சில்வாவின் பந்துவீச்சினால் உத்வேகம் பெற்று பெறப்பட்ட மிகச்சிறந்த வெற்றியிது என  தெரிவித்துள்ள குமார்சங்ககார இலங்கை அணி தன்னை நம்புவதற்கான ஊக்கியாக இந்த வெற்றி விளங்கும் எனவும் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.

இனி தங்கள் திறமையை வெளிப்படுத்தவேண்டியது துடுப்பாட்ட வீரர்களே  என குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி வெற்றிபெறும் என எவரும் கருதவில்லை என தெரிவித்துள்ள ரசல் ஆர்னோல்ட் மத்தியுஸ் சிறப்பாக ஆடவேண்டியதன் அவசியம் தற்போது உணரப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.