கோத்­த­பாய வேட்­பாளர் என்­ப­தனை   ஆகஸ்ட் 7 இல்  மஹிந்த அறி­விப்பார் - கெஹெ­லிய ரம்­புக்­வெல

Published By: Digital Desk 3

22 Jun, 2019 | 11:45 AM
image

(ரொபட் அன்­டனி)

பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர்  முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ என்­ப­தனை மஹிந்த ராஜ­பக் ஷ ஆகஸ்ட் மாதம் ஏழாம் திகதி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விப்பார் என்று  கூட்டு  எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார். 

அதற்கு முன்னர் நாடு முழு­வதும்  ஜனா­தி­பதி வேட்­பாளர்  தொடர்பில் நாடு முழு­வதும் மக்கள்  மத்­தியில்  தெ ளிவு­ப­டுத்தும் கூட்­டங்கள் நடத்­தப்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார். 

ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  அண்­மையில் ஆற்­றிய உரையின் ஊடாக சில விட்­டுக்­கொ­டுப்­புக்­க­ளுக்கு தயா­ரா­கி­யுள்­ளமை தெ ளிவா­கின்­றது  என்றும் அவர் குறிப்­பிட்டார். 

எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்தல் மற்றும்  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கூற்று  என்­பன குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அவர் இதனை குறிப்­பிட்டார். 

கூட்டு  எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல  இது குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில் 

எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் கௌர­வ­மான தீர்­மானம் ஒன்றை எடுப்பேன் என்று ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­ததன் மூலம் அவர் சில விட்­டுக்­கொ­டுப்­புக்­க­ளுக்கு தயா­ரா­கி­யுள்ளார் என்­பது தெரி­கின்­றது. 

அத்­துடன்  எதிர்­வரும் ஜனா­தி­பதி  தேர்­த­லா­னது இரு­முனை போட்­டிக்­க­ள­மா­கவே அமையும் என்ற விட­யத்­தையும்     ஜனா­தி­ப­தியின் உரை  வெ ளிப்­ப­டுத்­து­கின்­றது.  

எப்­ப­டி­யி­ருப்­பினும் எமது ஜனா­தி­பதி வேட்­பாளர்  கோத்­த­பாய ராஜ­பக்ஷ என்­பதில் நாங்கள் உறு­தி­யாக இருக்­கின்றோம்.   இதனை சுதந்­திரக் கட்­சியும் ஏற்­றுக்­கொள்ளும் என்­பதே எமது எண்­ண­மாகும். சுதந்­திரக் கட்­சியில் இருக்­கின்ற சிலர்  ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்­து­கொள்ளும்  சாத்­தி­யமும் உள்­ளது. ஆனால் அதி­க­மானோர்  எமது பக்கம் வந்­து­வி­டு­வார்கள். 

மேலும்  பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பாளர்  முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ என்­ப­தனை மஹிந்த ராஜ­பக்ஷ ஆகஸ்ட் மாதம் ஏழாம் திகதி  உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விப்பார் என்று எதிர்­பார்க்­கின்றோம். 

பொது­ஜன பெர­மு­னவின்   சம்­மே­ளனம் எதிர்­வரும் ஆகஸ்ட்  மாதம் ஏழாம் திகதி  நடை­பெறும். இந்த சம்­மே­ளனக் கூட்­டத்தில்  மஹிந்த ராஜ­பக்ஷ இந்த அறி­விப்பை வெ ளியி­டுவார் என்று எதிர்­பார்க்­கின்றோம். 

அதற்கு முன்னர்  நாங்கள் நாட­ளா­விய ரீதியில்  எமது ஜனாதிபதி வேட்பாளர் குறித்த பிரசார  செயற்பாடுகளை நடத்துவோம்.   அவ்வாறு நாடு முழுவதும் மக்களின்  கருத்துக்களை பெற்ற பின்னர்   மஹிந்த  ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பார். அவர் .கோத்தபாய ராஜபக்ஷவாகவே இருப்பார் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58