காலில் உருவாகும் நீரிழிவு நோயை கண்டறியும் நவீன பரிசோதனை

Published By: Daya

22 Jun, 2019 | 10:48 AM
image

நீரிழிவு நோயால் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் பாதிக்கப்படும் என்றாலும், குறிப்பாக கண், சிறுநீரகம், இதயம் மற்றும் கால் நரம்புகள் ஆகிய நான்கு உறுப்புகள் கடுமையாகவும், முழுமையாகவும் பாதிக்கும் என்கிறார்கள் நீரிழிவு நோய் நிபுணர்கள்.

இரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, இசிஜி மற்றும் ரெட்டினோ பரிசோதனை ஆகிய பரிசோதனைகளை செய்தால் இதயம், சிறுநீரகம், கண் ஆகிய உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் நீரிழிவு நோயின் பாதிப்பை துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.

நீரழிவு நோய் கால்களையும், பாதங்களையும், கால் நரம்புகளை பாதித்து இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிய, Sensitometer எனப்படும் ஒரு கருவியின் மூலம் பரிசோதனை மேற்கொள்வார்கள். இதன்போது கால் நரம்பின் செயல்பாடு (Hot. Cold. Pain)  என மூன்று நிலைகளில் கண்டறியப்படுகிறது. இதன் மூலம் கால்களில் உங்களுடைய உணர்வுகள் எப்படி செயற்படுகின்றன என்பதை துல்லியமாக கண்டறியலாம். அதன் மூலம் நீரிழி வு நோயின் பாதிப்பு காலில் எவ்வளவு உள்ளது என்பதை அறியலாம்.

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்காததே இத்தகைய சிக்கல்கள் தோன்றுவதற்கு முக்கிய காரணம். அதனால் நீரிழிவு நோயை பரிசோதனை மூலம்  உறுதிப்படுத்தப்பட்டவுடன் அதனை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது தான் சரியான தீர்வு.

ஒருவருக்கு நீரிழிவு நோய் உருவாகத் தொடங்கி ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னரே அதனுடைய பாதிப்புகள் தெரியத் தொடங்கும். அதனால் நீரிழிவு நோயை வரும் முன் காப்பதே சிறந்தது. நீரிழிவு நோயால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் 20% எனில், அதனை மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் மீட்டெடுத்து, இயல்பான நிலைக்கு கொண்டு வர இயலும். ஆனால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தபடாமல்  அதன் பாதிப்பு 80% இருந்தால், அதனை சிகிச்சைகளின் மூலம் முழுமையாக மீட்டுருவாக்கம் செய்ய இயலாது. அதனை கட்டுப்படுத்த மட்டுமே இயலும்.

சிலர் தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, கால்களை சத்திர சிகிச்சை மூலம் அகற்றிக் கொண்டு, பின்னர் பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை மூலம் தேவையான அளவிற்கு நிவாரணத்தையும் பெற்றுக் கொள்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04