கல்முனைக்கு ஆதரவு தெரிவித்து நாளை யாழில் கவனயீர்ப்பு போராட்டம்  

Published By: Daya

22 Jun, 2019 | 10:04 AM
image

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை உடனடியாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி  யாழ்ப்பாணத்தில் நாளை (23) ஞாயிற்றுக்கிழமை  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. 

அகில இலங்கை சைவ மகா சபை இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. 

யாழ் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக நாளை மதியம் 2 மணிக்கு இப்போராட்டம் இடம்பெறும் என சைவ மகாசபை அறிவித்துள்ளது.

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை உடனடியாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி சைவ, பௌத்த, கிறிஸ்தவ மதகுருமாரும் அப்பிரதேச பொது அமைப்புக்களின் பிரநிதிகளும் பொதுமக்களும் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணவேண்டிய தேவை இருந்தும் அரசு இப்பிரச்சினையை இழுத்தடித்து வருகின்றது. இதனால் உண்ணாவிரதம் இருப்போரின் உடல்நிலை மோசமாகிக்கொண்டிருக்கின்றது. 

இந்த நிலையிலேயே அங்கு உண்ணா விரதம் இருக்கும் உறவுகளுக்கு ஆதரவை வெளிப்படுத்துவதுடன் கல்முனை பிரதேச செயலகத்தை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தரம் உயர்த்தவேண்டும் என வலியுறுத்தி நாளைய போராட்டம் இடம்பெறவுள்ளது. 

இப்போராட்டத்தில் எந்தவித வேறுபாடுகளும் இன்றி அனைவரையும் உணர்வுபூர்வமாக பங்கெடுக்குமாறு சைவ மகா சபை அழைப்பு விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17