பிரித்தானிய பழைமைவாதக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்தக் கட்சியின் தலைமைத்துவத்துக்கான இறுதிக் கட்ட வாக்கெடுப்பில்  போட்டியிடும் இரு வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் செயற்கிரமத்தில்  மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இது தொடர்பான மூன்றாம் கட்ட வாக்கெடுப்பில்  முன்னாள்  வெவளிநாட்டு செயலாளரான போரிஸ் ஜோன்ஸன்  143 வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ள அதேசமயம், வெளிநாட்டு செயலாளரான ஜெரேமி ஹன்ட்  54 வாக்குகளையும் சுற்றுச்சூழல் செயலாளர் மைக்கேல் கொவ்  51 வாக்குகளையும்   உள்துறை செயலாளர்  சஜித் ஜாவித் 38 வாக்குகளையும் பெற்று முறையே இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளனர்.

இந்நிலையில் மேற்படி வேட்பாளர்களின் தொகையை  மூன்றாகக் குறைப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பொன்று நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்டது. 

அதன் பெறுபேறுகள்  விரைவில் வெளியாகவுள்ளன. 

தொடர்ந்து அந்த வேட்பாளர்களில்  இறுதியாக இருவர் தெரிவுசெய்யப்பட்டு அவர்களில் ஒருவர் கட்சி உறுப்பினர்களால் தலைவராக தெரிவுசெய்யப்படவுள்ளார்.