bestweb

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைகள்: மூன்று நீதிபதிகள் முன் விசாரணை நடத்த சட்ட மா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை

Published By: Vishnu

21 Jun, 2019 | 08:35 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் படுகொலைகள் தொடர்பில்  மேல் நீதிமன்ற விஷேட விசாரணைகளை ஆரம்பிக்க மூவர் கொண்ட சிறப்பு குழாமை நியமிக்குமாறு சட்ட மா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான தப்புல டி லிவேரா பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். 

 

1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் சட்டத்தின் 450 (4) ஆம் உருப்புரை மற்றும்  நீதிமன்ற கட்டமைப்பு சட்டத்தின்  12(2) ஆம் அத்தியாயத்துக்கு அமைய இந்த கோரிக்கையை  சட்ட மா அதிபர் பிரதம நீதியரசரிடம் முன்வைத்துள்ளதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மோசஸ் நியோமால் ரங்கஜீவ,  மெகசின் சிறைச்சாலையின் அப்போதைய சிறை அத்தியட்சர்  லமாஹேவகே எமில் ரஞ்சன்,  தற்போது தலைமறைவாகியுள்ள சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவின்  மிதுவகே இந்திக சம்பத் ஆகியோருக்கு எதிராகவே  விசாரணைகளுக்கு மூவர் கொண்ட  சிறப்பு நீதிமன்றை அமைக்குமாறு சட்ட மா அதிபர்  இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்,

2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த படு கொலைகள் தொடர்பில், அன்றிலிருந்து 5 வருடங்கள் உரிய விசாரணைகள் இடம்பெற்றிருக்கவில்லை என சுட்டிக்கடடியுள்ள சட்ட மா அதிபர், 2017 ஆம் ஆண்டே சி.ஐ.டி. ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் 2018 ஆம் ஆண்டின் இறுதி காலப் பகுதியில் விசாரணைக் கோவை சட்ட மா அதிபருக்கு பாரப்படுத்தப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியே சட்ட மா அதிபர்  பிரதம நீதியர்சரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு தலைவர்...

2025-07-11 14:47:02
news-image

ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் தலைவராக...

2025-07-11 14:25:54
news-image

செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் உண்மையைக்...

2025-07-11 14:30:08
news-image

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற...

2025-07-11 13:32:42
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-07-11 14:23:59
news-image

மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்திய உப...

2025-07-11 13:16:16
news-image

போதைப்பொருள் தகராறு ; கத்திக்குத்துக்கு இலக்காகி...

2025-07-11 13:03:54
news-image

ஹொரணையில் சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் சந்தேக...

2025-07-11 12:10:56
news-image

சாதாரண தர பரீட்சையில் 13 392...

2025-07-11 12:33:21
news-image

மல்வத்துஹிரிபிட்டியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் சந்தேக...

2025-07-11 11:49:40
news-image

மன்னார், கதிர்காமத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளில்...

2025-07-11 11:46:08
news-image

இலங்கையின் சுகாதாரத்துறை முன்னேற்றம், ஊடக துறையின்...

2025-07-11 11:12:07