விஜய் பிறந்த தினத்தை முன்னிட்டு தளபதி 63 படத்திற்கு தலைப்பு வைத்து பெர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

‘தெறி', 'மெர்சல்' படங்களுக்கு பின்னர் விஜய் - அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் 'தளபதி 63'. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டனர்.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டனர். பிகில் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரை தற்போது படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா வெளியிட்டுள்ளார். 

இந்த போஸ்டர் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இரண்டாவது லுக் போஸ்டரை இன்று நள்ளிரவு 12 மணிக்கும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தில் விஜய்யுடன், நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, சவுந்தரராஜா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். 

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.