அலரிவிதை உட்கொண்டு இரண்டு பிள்ளைகளின் தாயாரான இளம் குடும்பப்பெண் தற்கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவில்  இடம்பெற்றுள்ளது.

காரைதீவு. 08 ஜச்சேர்ந்த தில்லையம்பலம் உதயகுமாரி (வயது 32) என்பவரே இவ்விதம் தற்கொலை செய்துகொண்டவராவார்.

வெள்ளிக்கிழமை காலை 7மணியளவில் அலரிவிதையை உட்கொண்ட அவரை உறவினர் காரைதீவு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அங்கிருந்து உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல்போகவே அவர் உயரிழந்துள்ளார்.

சம்மாந்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

வாழ்க்கையில் ஏற்பட்டவிரக்தி காரணமாகவே அவர் தற்கொலை செய்துள்ளார் எனத் தெரியவருகிறது.

இவரது சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.