(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கை இன்னும் பாராளுமன்றத்துக்கு கிடைக்கவில்லையென பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரஸ்ரீ  சபையில் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று பிரதான எதிர்க்கட்சி எம்.பி.யான நிமல் லான்சா, ஏப்ரல் 21 தற்கொலைக்குண்டுத்தாக்குதல்கள் நடந்து இன்றுடன் இரு மாதங்கள் கடந்து விட்டன. 

இந்த  தற்கொலைக்குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்துவிட்டதா?அது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு விட்டதா?இத்தாக்குதல்களுக்கு பின்னரான சட்டங்கள் அமுலாகுமா என பிரதி சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார். 

இதன்போதே பிரதி சபாநாயகர் மேற்கண்டவாறு கூறினார்.