வவுனியா தர்மலிங்கம் வீதிக்கு அருகே காணப்பட்ட சட்டவிரோத நடைபாதை இன்று (21.06.2019) காலை  வவுனியா நகரசபையினரால் அகற்றப்பட்டது.

வவுனியா தர்மலிங்கம் வீதிக்கு அருகே காணப்படும் வர்த்தக நிலையத்திற்கு (சட்டவிரோத கட்டிடம்) முன்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா நகரசபையின் அனுமதியின்றி  கொங்கிறீட் மூலம் அமைக்கப்பட்ட நடைபாதையினை நகரசபை ஊழியர்கள் இன்று அகற்றியுள்ளனர்.

பொதுமகனொருவர் வவுனியா நகரசபைக்கு மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்தே கொங்கிறீட் நடைபாதை அகற்றப்பட்டது.