இந்­தி­யா­வி­லி­ருந்து தருவிக்கப்படும் பஸ்கள் தோட்டப்பகுதிகளில் சேவையிலீடு­ப­டுத்­தப்­படும் - ரணதுங்க

Published By: R. Kalaichelvan

21 Jun, 2019 | 02:39 PM
image

இந்­தி­யா­வி­லி­ருந்து தரு­விக்­கப்­படும் 500 சிறிய பஸ்­க­ளில் கணிசமான பஸ்­களை பதுளை மாவட்ட பெருந்­தோட்டப் பகுதிகளில் சேவையில் ஈடு­ப­டுத்­த உரிய நட­வ­டிக்­கைகள் மேற்கொள்­ளப்­ப­டு­மென்று போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க பதுளை மாவட்ட பாராளு­மன்ற உறுப்­பினர் அ. அர­விந்­த­கு­மா­ரிடம் உறு­தி­ய­ளித்தார்.

போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின்  குழுக்­கூட்டம் நேற்று அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க தலை­மையில் பாரா­ளு­மன்றக் கட்­டிடத் தொகு­தியில் குழு அறை இரண்டில் நடை­பெற்­றது. இக்­கூட்­டத்தில் இரா­ஜாங்க அமைச்சர் அசோக்க அபே­சிங்க மற்றும் அமைச்சின் செய­லா­ளர் புகை­யி­ரத நிலைய பொது முகா­மை­யா­ளர் இ.போ.ச.தலைவர் உள்­ளிட்ட அமைச்சின் உயர் அதி­கா­ரிகள் பலரும் கலந்து கொண்­டி­ருந்­தனர். 

இக்­கு­ழுக்­கூட்­டத்­தின்­போது உறுப்­பினர் அ. அர­விந்­த­குமார் உரை­யாற்­று­கை­யில், பதுளை மாவட்­டத்தின் பெருந்­தோட்டப் பகு­தி­களில் இ.போ.ச. "ஈ" ரக சிறிய பஸ்­களை சேவையில் ஈடு­ப­டுத்த வேண்டும். 

இச் சேவைகள் முறை­யா­கவும் கிர­ம­மா­கவும் ஈடு­ப­டுத்­தப்­ப­டா­ததால் தோட்ட மக்கள் மற்றும் வெவளியில் தொழி­லுக்கு செல்­வோர், மாண­வர்கள் பெரும் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­நோக்­கிய வண்­ண­முள்­ளனர். இ.போ.ச. பஸ் சேவைகள் முறை­யாக இடம்­பெறின் பய­னா­ளி­க­ளுக்கு பெரும் நன்மை கிடைப்­ப­துடன் அர­சுக்­கான வரு­மானம் மேலோங்கும். அத்­துடன் பல­ருக்கு தொழில் வாய்ப்­புக்­களும் கிட்டும்.

இவ்­வ­கையில் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­படும் இ.போ.ச. பஸ்­கள் இரவு வேளை­களில் அந்தந்த தோட்­டங்­க­ளி­லே­யே தரித்து நிறுத்­தப்­பட்­டு மறு­தினம் காலை சேவையில் ஈடு­ப­டவும் வேண்டும். கிரா­மத்­த­வர்கள் குறிப்­பிட்ட பஸ்­களின் சார­தி­க­ளா­கவும் நடத்­து­னர்­க­ளா­கவும் இருக்கும் பட்­சத்தில் அவர்கள் இரவு வேளை­களில் தோட்டப் பகு­தி­க­ளுக்கு செல்லும் பஸ்­களில் தோட்­டங்­களில் பய­ணி­களை இறக்­கி­விட்டு மறு­தினம் பஸ்­களை சேவையில் ஈடு­ப­டுத்­தும்­போது கால­தா­ம­தங்கள் ஏற்­ப­டு­வ­தினால் பய­னா­ளி­க­ளுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கமுடியும்.  

பதுளை,  கொழும்பு புகை­யி­ர­தங்­களில்  பய­ணிகள் பெரும் சிர­மங்­களை எதிர்­கொள்­கின்­றனர். ஆக­வே பய­ணி­களின் நன்மை கருதி கூடு­த­லான ரயில் பெட்­டி­களை இணைக்க ஏற்­பா­டு­களைச் செய்ய வேண்டும் என்றார்.

இதற்கு அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க பதி­ல­ளிக்­கை­யில், இந்­தி­யா­வி­லி­ருந்து தரு­விக்­கப்­ப­ட­வுள்ள 500 "ஈ" ரக சிறிய பஸ்­களில் கணி­ச­மான பஸ்­களை பதுளை மாவட்ட பெருந்­தோட்ட பகு­தி­களில் ஈடு­ப­டுத்த நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும். 

தாங்கள் குறிப்­பிட்­ட­தற்­க­மை­ய பஸ்­களை பெருந்தோட்­டங்­க­ளி­லேயே இரவு வேளை­களில் தரித்து நிறுத்­து­வ­தற்கும் தோட்டப் பகு­தி­க­ளி­லி­ருந்து சாரதி மற்றும் நடத்­து­னர்­களை இணைத்துக் கொள்ளல் வேண்டுமாயின் தோட்டப் பகு­தி­க­ளி­லி­ருந்து இ.போ.ச. பஸ்­க­ளுக்கு சார­தி­க­ளா­கவும் நடத்­து­னர்­க­ளா­கவும் சேவை­யாற்­று­வ­தற்கு உரிய பெயர்ப் பட்­டி­ய­லொன்­றையும் தரு­மாறு கேட்­டுக்­கொள்­கின்றேன். 

மேலும் பதுளை–கொழும்பு புகையிரத சேவையில் அதிக பெட்டிகளை இணைப்பதானால் மேலும் புகையிரத இயந்திரங்களை இணைக்க வேண்டும்.அதற்கான புகையிரத இயந்திரங்கள் போதியளவு எம்மிடமில்லை. இப்பிரச்சினையை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50