248 மாணவர்கள் கல்வி கற்கும் கண்டியின் வதுளியட்ட ஆரம்பப் பாடசாலையை செப்பனிடுவதற்காகவும், மற்றும் வெள்ளையடிப்பதற்காகவும் AIA இன்ஷூரன்ஸின் தலைமை அலுவலகத்திலிருந்தும், கிளைக் காரியாலயங்களிலிருந்தும் மிகவும் உற்சாகமான 50 ஊழியர்களைக் கொண்ட தன்னார்வலர் அணியானது சமீபத்தில் கொழும்பிலிருந்து கண்டி நகருக்குப் பயண மொன்றை மேற்கொண்டிருந்தது.

மிகவும் மோசமான நிலையிலிருந்த பாடசாலைக் கட்டடங்களை AIA இன் தன்னார்வ ஊழியர்கள் அணியானது சுத்தப்படுத்தி வெள்ளையடிக்கும் பணிகளை மிகவும் உற்சாகமாகவே மேற் கொண்டிருந்ததோடு, பணியின் இறுதி நாளன்று இக்கட்டடத்தைப் புதுப்பொலிவொன்றுடன் மாற்றியுமிருந்தது.

AIA இன் மனிதவளப் பணிப்பாளர் துஷாரி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “AIA” நிறுவனத்திலுள்ள எங்களுடைய ஊழியர்கள் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் மிகவும் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.

மேலும் எங்களுடைய நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR)  முயற்சிகளுக்குப் பங்களிப்புச் செய்யும் எங்களது ஊழியர்களின் உற்சாகத்தையும், அர்ப்பணிப்பையும் இம்முயற்சி மிகவும் பறைசாற்றுகின்றது” எனத் தெரிவித்தார். AIA  இனுடைய CSR முயற்சிகளானது AIA ஊழியர்களை ஒன்றிணைத்து AIA சேவையாற்றும் சமூகம் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமான, சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கு உதவி செய்யக்கூடிய நிறுவனத்தினுடைய இலக்கை நிறைவேற்றுவதையே நோக்காகக் கொண்டுள்ளது