தங்கையை வாழ்த்திய கார்த்தி

Published By: Daya

21 Jun, 2019 | 02:22 PM
image

‘ராட்சசி’ படத்தில் இடம்பெறும் பாடலை பாடிய பாடகி பிருந்தா சிவகுமாரை அவரது சகோதரரும், நடிகருமான கார்த்திக் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர குடும்பமாக மிளிரும் சிவக்குமார் குடும்பத்தில் சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோருடன் சிவகுமாரின் புதல்வியான பிருந்தா சிவகுமாரும் பாடகியாக கலை சேவையை தொடங்கினார். கௌதம் கார்த்திக் நடித்த ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்ற படத்தில் ஒரு பாடலைப் பாடி பின்னணி பாடகியாக தன்னுடைய கலைப்பயணத்தை தொடங்கியவர் பிருந்தா சிவகுமார்.

இவர் தற்போது ஜோதிகா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ராட்சசி’ படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். ஷான் ரோல்டன் இசையில் ‘நீ என் நண்பனே..’ எனத் தொடங்கும் அந்த பாடலை பிருந்தா சிவகுமார் பாடியிருக்கிறார். சமூக வலைதளத்தில் நேற்று இந்த பாடல் வெளியானது. இதைக் கேட்ட அனைவரும் பிருந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அவரது சகோதரரும், நடிகருமான கார்த்திக் தன்னுடைய இணையப் பக்கத்தில் பிருந்தாவை மனதார பாராட்டி இருக்கிறார்.

கார்த்தி தற்போது ஜோதிகாவுடன் இணைந்து ஜீத்து ஜோசப் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷான் ரோல்டனின் இசையில் கவனம் ஈர்க்கும்...

2024-10-08 20:50:47
news-image

பிரைம் வீடியோவின் அசல் திரில்லர் இணைய...

2024-10-08 21:02:59
news-image

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த...

2024-10-08 16:43:22
news-image

அர்ஜுன் - ஜீவா இணையும் 'அகத்தியா'

2024-10-08 21:03:58
news-image

வைபவ் நடிக்கும் 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்...

2024-10-08 21:04:37
news-image

கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' படத்தின்...

2024-10-08 21:05:23
news-image

சூர்யா நடிக்கும் 'சூர்யா 44' படத்தின்...

2024-10-07 17:48:00
news-image

துருவா சர்ஜா நடிக்கும் 'மார்டின்' பட...

2024-10-07 17:02:58
news-image

'மக்கள் நாயகன்' ராமராஜன் அறிமுகம் செய்து...

2024-10-07 15:05:07
news-image

அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'ஒன்ஸ்மோர்' படத்தின்...

2024-10-07 15:04:49
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் வருண்...

2024-10-07 15:04:26
news-image

நடிகர் ஜீவா நடிக்கும் 'பிளாக்' படத்தின்...

2024-10-05 17:24:45