புகையிரத ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பொது மக்களின் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். 

இந்நிலையில், புகையிரத தொழிற்சங்க பிரச்சினைகளுக்கு ஒன்றரை மாதக் காலப்பகுதிக்குள் தீர்வை பெற்று தருவதற்கு அரசாங்கம் உறுதி தெரிவித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் அசோக் அபயசிங்க தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்களுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்தையின் போது இதனை குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் நேற்று நள்ளிரவு தொடக்கம் 48 மணித்தியாலம் பணிப்பகிஷ்கரிப்பு நடைமுறைப்படுத்துவதாக ரயில்வே நிலைய பொறுப்பதிகார சங்கத்தின் தலைவர் கபில விமலரத்ண தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.