சிகிரியா பகுதிக்கு மத்திய மாகாண ஆளுநர் விஜயம்

Published By: Digital Desk 3

21 Jun, 2019 | 01:19 PM
image

இலங்கையின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றானதும் வரலாற்று சிறப்பு மிக்க இடமுமான சிகிராயா பகுதியை மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன பார்வையிடச் சென்றார்.

இதன் போது அப்பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் செல்லும்  மலசலகூடம்,கடைத்தொகுதிகள் , மலைக்கு செல்லும் பாதைகள் மற்றும் குளங்களை பார்வையிட்டார்.

இந்நிலையில் கருத்து தெரிவித்த மத்திய மாகாண ஆளுநர், சிகிரியா பிரதேச சபையின் கீழ் உள்ள இப்பகுதி சிறந்த முறையில் காணப்படுகின்றமை பாராட்டத்தக்க விடயமாகும். இலங்கையில் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைதரும் இடங்களில் சிகிரியா காணப்படுகிறது. ஆகவே இதனை நாம் பாதுகாப்பதுடன்  சுற்றுலாதுறை மேம்படுத்த மேலும் பல அபிவிருத்தி வேலைத்திட்டம் முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக காணப்படுகிறது.

அத்துடன் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையினால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை மிக குறைந்த அளவாக காணப்படுவதால் இப்பிரதேச வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாக அறிய முடிந்ததாகவும் அதற்கு மாற்று வேலைத்திட்டம் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடாத்திய பின்னர் அதனை ஆரம்பிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதன் போது மத்திய மாகாண நூலக சேவை தலைவர் கீர்த்தி துனுவில, சிகிரியா பிரதேச சபை தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right