Published by R. Kalaichelvan on 2019-06-21 12:22:08
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போடியா, லாவோஸ் நாடுகளுக்கு இம் மாத இறுதியில் மேற்கொள்ளவிருந்த பயணத்தை திடீரென ரத்துச் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 26ஆம் திகதி தொடக்கம், கம்போடியாவுக்கும் லாவோஸுக்கும் பயணம் மேற்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டிருந்தார்.
எனினும், அவரது இந்தப் பயணத் திட் டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதமே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.