ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரன்சிகே தெரிவித்துள்ளார்.


இவ்விலை அதிகரிப்பினால் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஐபிரிட் (Hybrid) வகை மற்றும் வேறு பிரதான வாகன வகைகளின் விலை 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்விலை அதிகரிப்பானது ஜப்பானில் வாகன விலை அதிகரித்தமையால் ஏற்பட்டுள்ளதே தவிற வற் வரி அதிகரிப்பு காரணமாக வாகன விலைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.