முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேர்தல் காலத்தில் மட்டுமே எம்.ஜி.ஆர். மீது காதல் வரும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரசாரம் மேற்கொண்ட அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் ஜெயலலிதா ஒரு முறை கூட மக்களை வந்து சந்திக்கவில்லை. மக்களுக்காக அவர் எந்த ஒரு நலத்திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. தேர்தலுக்கு தேர்தல் தான் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். மீது காதல் வரும். தேர்தல் முடிந்த வேகத்தில் அவர் எம்.ஜி.ஆரை மறந்துவிடுவார் என்றார்.