“காணாமல் போனோர் அலுவலகத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டை ICRC கைவிடவேண்டும்”

Published By: Digital Desk 4

20 Jun, 2019 | 11:30 PM
image

இலங்கை அரசாங்கத்தின் காணாமல் போனோரின் அலுவலகத்தையோ அவ்  அலுவலகத்தின் செயற்பாடுகளையோ காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுக்காளான நாம் ஏற்றுக்கொள்ளாத நிலையில் அந்த அலுவலகத்தின் செயற்பாடுகளை எம்மத்தியில் சூட்சுமமாக திணிக்கும் முயற்சியில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் செயற்பட்டுவருவதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி மரியாசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார் .

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள்   இன்றுடன்  837 ஆவது நாளாக போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்நிலையில் இன்றையதினம் (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் அந்த ஊடக சந்திப்பில் தெரிவித்ததாவது,

எமது உறவுகளுக்காக நீதிகோரி போராடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளான எம்மால் ஏற்றுக்கொள்ளாத  இலங்கை அரசாங்கத்தின் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு துணைபோகும் செயற்பாடுகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஈடுபட்டுள்ள அதேவேளை,

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளான எமக்கு ஆதரவாக இருக்கவேண்டிய சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் தற்போது அரசின் காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தின் கொள்கைகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மத்தியில் நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. 

இரகசியமான முறையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் உறவுகள் சிலரை முல்லைத்தீவு மாவட்டத்தில் அழைத்து சந்திப்பினை நடத்தி வருகின்றனர். 

இந்த செயற்பாட்டால் கடந்த இரண்டு வருடங்களுக்கு  மேலாக எமது உறவுகளுக்காக நீதிகோரி வீதியில் போராடும் நாம் விரக்தி அடைந்துள்ளோம் . யுத்தம் முடிந்து 10 வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் குறித்து எம்மத்தியில் வராத சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இன்று அரசின் காணாமல் போனோரின் அலுவலகத்தின் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த எம்மத்தியில் வந்து காணாமல் போன உறவினர்களின் உறவுகளை பிரித்து தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதை முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் அக்கப்பட்டவர்களின் உறவுகளான நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33