(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

கல்முனை வடக்கு உப பிரதேச  செயலகப்பிரச்சினையை தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் மட்டுமே தீர்க்க முடியும். வேறு எந்தவொரு சக்தியாலும் அதனை மேற்கொள்ளமுடியாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் அமீர் அலி பாராளுமன்றில் தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

காவியுடை தரித்தவர் எல்லாம் இன்று ஐ.ஜி.பி.க்களாகி விட்டனர்.இவர்கள்தான் இன்று அமைச்சர்களை பதவி நீக்குவது, வீட்டுக்கு அனுப்புவது, பிரதேச சபைகளைப்பிரித்துக்கொடுப்பது  போன்ற வேலைகளை செய்கின்றனர். கல்முனை பிரதேச செயலகம் விவகாரத்தை சுமுகமாக தீர்த்துக்கொள்ள தமிழ் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கரஸ் கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. 

ஆனால் வியாழேந்திரன், கருணா  அம்மான் போன்றவர்கள்  இந்த விடயத்தில் தலையிட்டு எம்.ஜி.ஆர்.,சிவாஜிகளாகி விட்டனர். அதேவேளை மட்டக்களைப்பு தமிழ் சமூகம் செய்த மிகப்பெரிய அநியாயம் வியாழேந்திரனை எம்.பி.யாகத்தெரிவு செய்தது. படித்தவர்களை தெரிவு செய்யுமாறு கேட்டபோது படிப்பித்தவர்களை தெரிவுசெய்து விட்டனர் என்றும் குறிப்பிட்டார்.