கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் இரண்டு சமூகத்தாருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின் நாளை நல்லதொரு தீர்வினை உங்களுக்கு நான் பெற்றுத்தருவேன் மக்கள் முன்னிலையில் அத்துரலிய ரத்தின தேரர் தெரிவித்தார்.

இரண்டு சமூகத்தாருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் மக்கள் முன்னிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்க கருத்து தெரிவித்த ரத்தின தேரர்,

நான் அனைத்து நியாயங்களையும் முஸ்லிம் தரப்பினரிடம் எடுத்துக் கூறியுள்ளேன் இது தமிழர்களின் பிரதேச செயலகம் இல்லை இது இந்த நாட்டு அரசினுடைய பிரதேச செயலகம் எனவே இதற்கு எவரும் உரிமைகோர முடியாது. 

மீண்டும் எல்லை நிர்ணயம்  செய்து அதன் அறிக்கையை எதிர்பார்ந்து நாங்கள் இந்த பிரச்சினையை தாமதிக்க முடியாது. 

இதற்கான முடிவினை நாங்கள் விரைவாக எடுக்கவேண்டும். உண்ணாவிரதம் இருப்போரின் உடல் நிலையானது பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எது எவ்வாறாக இருந்தாலும்  நாளை நல்லதொரு  தீர்வினை உங்களுக்கு நான் பெற்றுத்தருவேன் என மக்கள் முன்னிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.