கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை விரைவில் தரமுயர்த்துவதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர் உறுதி

Published By: Vishnu

20 Jun, 2019 | 09:14 PM
image

(ஆர்.யசி)

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை விரைவில் தரமுயர்த்துவதற்கு  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம்  வாக்குறுதியளித்துள்ளார்.  

எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கையை விரைவில் பூர்த்தி செய்து கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையான அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று பாராளுமன்றத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்திருந்து. இச்சந்திப்பில் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபயவர்த்தனவும் கலந்துகொண்டிருந்ததுடன், கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, கவீந்திரன் கோடீஸ்வரன், ஸ்ரீநேசன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது கல்முனை வடக்கு பிரதேச சபை பிரச்சினை குறித்தும் அதனை அடிப்படியாக வைத்து தற்போது முன்னெடுத்து வருகின்ற ஆர்பாட்டங்கள் உண்ணாவிரத போராட்டங்கள் குறித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொட்ர்பில் கடந்த ஏப்ரல் 5ஆம் திகதி பிரதமருடன் தாம் பேச்சுவார்த்தையும் , ஜுன் 30ஆம் திகதிக்குள் இதற்கு தீர்வை வழங்குவதாக உறுதியளித்திருந்தபோதும் ஏப்ரல் 21 தாக்குதல்களால் அதற்கான நடவடிக்கைகள் காலதாமதடைந்திருந்ததை பிரதமருக்கு நினைவுபடுத்தினர். 

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுப்பது என ஏப்ரல் மாத ஆரம்பத்திலேயே இணக்கம் காணப்பட்டது. இதற்கான எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்கும் நாம் ஏற்கனவே இணங்கியிருந்தோம் என்பதையும் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10