கம்பஹாவியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட  துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த வண்டியின் சாரதி படுகாயமடைந்துள்ளார். 

இதன்போது முச்சக்கரவண்டி சாரதியின் தோல் பகுதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிம்முல்ல பகுதியை சேர்ந்த 31 வயதுடைய சதுன் லக்மால் எனும் நபரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளார்.

இந்நிலையில் குறித்த  சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.