சதிகாரர்கள் நாட்டின் காணிகளை சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாதென ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

காணிகளின் உரிமை பொதுமக்களுக்கானது என்றும் காணி கொள்கையொன்றை விரைவில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். 

இன்று (20) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற காணி சட்ட சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

காணி தொடர்பான சட்டதிட்டங்களை தயாரிக்கின்றபோது ஒருபோதும் செல்வந்த வர்க்கத்தினர் அல்லது சட்டவிரோத வியாபாரிகளை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படகூடாது என்றும்இ நாட்டின் அப்பாவி விவசாய சமூகத்திற்கு காணி உரிமைகளை பெற்றுக்கொடுக்க வேண்டியது பொறுப்புவாய்ந்த ஒரு அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி  குறிப்பிட்டார். 

மேலும் நாட்டின் காணி பயன்பாடு தொடர்பிலான சட்டங்களும் வகுக்கப்பட வேண்டுமென்றும் புதிய திருத்தத்தின் கீழ் அதற்கான நிபந்தனைகள் ஒருபோதும் நீக்கப்படக் கூடாதென்றும் ஜனாதிபதி  குறிப்பிட்டார். 

காணி அதிகாரங்கள் பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட்டதன் காரணமாக இடம்பெற்றுள்ள துஷ்பிரயோகங்கள் தொடர்பாக விளக்கிய ஜனாதிபதி அவர்கள்இ அது தொடர்பில் குறித்த தரப்பினர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென்றும் தெரிவித்தார். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க> விஜேதாச ராஜபக்ஷ> ராஜித சேனாரத்ன. பி.ஹெரிசன். கயந்த கருணாதிலக்க> தயா கமகே உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் குறித்த அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.