விடுமுறை நாளில் 45 மில்லியன் ரூபா பணத்தை வசூலித்து சாதனை படைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின்  பிரதி பொது முகாமையாளர்  ராஜ குணதிலக தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகளை நேற்று இடம்பெற்ற மேதினக் கூட்டத்திற்கு வடகைக்கு அமர்த்தியதன் மூலம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாறானதொரு மிகப்பெரிய வருமானத்தை இலங்கை போக்குவரத்து சபை கடந்த கால மேதினங்களில் சம்பாதித்ததில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.