பத்திரிகையாளர் ஜமால்கசோகி படுகொலையுடன் சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமட் பின் சல்மானிற்கு தொடர்புள்ளது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதால் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஐ.நா அதிகாரியொருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜமால்கசோகி படுகொலை குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஐ.நாவின் சட்டவிரோத படுகொலைகள் குறித்த விசேட அறிக்கையாளர் அக்னஸ் கலமார்ட் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

சவுதிஅரேபியா வேண்டுமென்றே முன்கூட்டியே திட்டமிட்டு இந்த படுகொலையை செய்தது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளகூடிய அளவிற்கு சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசரிற்கு எதிராக நம்பதன்மை மிகுந்த ஆதாரங்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்  ஜமால்கசோகி சவுதி அரேபியாவினால் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் தனது முதல் விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத படுகொலைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின்  விசேட அறிக்கையாளர் அக்கெஸ் கலமார்ட் தனது ஜமால் கசோகி தொடர்பான தனது விசேட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தனது அறிக்கையில் விசேட அறிக்கையாளர் சவுதிஅரேபியாவின் இளவரசர் மீது குற்றச்சாட்டுகள் எதனையும் சுமத்தாத அதேவேளை தகுதி வாய்ந்த அதிகாரியொருவர் விசாரணையை மேற்கொள்வதற்கு ஏதுவாக உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ள என தெரிவித்துள்ளார்.