பூமியைப் போன்ற மேலும் இரண்டு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எரீஸ் எனப்படும் மேஷ விண்மீன் குழாமில் அமைந்துள்ள குறு விண்மீனை சுற்றிவரும் இரு கோள்கள், பூமியை ஒத்த சூழலில் அமைந்துள்ளதாக ஜேர்மனிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

பூமியிலிருந்து 12.5 ஒளிவருட தூரத்தில் அமைந்துள்ள இந்தக் கோள்களின் இயக்கத்தை 3 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வந்துள்ளனர்.

சூரியக் குடும்பத்தில் சூரியனை சுற்றி வரும் பூமி உள்ளிட்ட கோள்களைப் போலவே, அவை இரண்டும் இயங்குவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்.