இந்தியாவில் விவசாயி ஒருவர், தனது வீட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சிலை அமைத்து வழிபாடு நடத்தி வருகிறார்.

தெலுங்கானா மாநிலம் ஜங்கோன் மாவட்டம் கொன்னே கிராமத்தைச் சேர்ந்தவர் புஸ்சா கிரு‌‌ஷ்ணா (32). விவசாயியான இவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் தீவிர அபிமானி. தனது வீட்டில் அவருக்கு 6 அடி உயரத்தில் சிலை அமைத்துள்ளார்.

அத்துடன், ட்ரம்பை கடவுளாக கருதும் இவர், தினமும் அந்த சிலையின் நெற்றியில் பொட்டு வைத்து, மாலை அணிவிக்கிறார். தொடர்ந்து, அபிஷேகம் செய்து ஆரத்தி காட்டுகிறார். அப்போது, ‘ஜெய் ஜெய் ட்ரம்ப்’ என்று மந்திரம் உச்சரிப்பதுபோல் கூறுகிறார்.

இதுபற்றி கிரு‌‌ஷ்ணா கூறுகையில், ‘‘ட்ரம்ப் ஒரு வலிமையான தலைவர். அவரது துணிச்சலான செயல்பாடு எனக்கு பிடிக்கும். எனவே, அவரை வழிபடுகிறேன். என்றாவது ஒருநாள் அவரை நான் சந்திப்பேன்’’ என்றார்.

“ட்ரம்பின் சிலை அமைக்க ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளார். அத்துடன், சிலை திறப்பு அன்று கிராம மக்களுக்கு தடல்புடலாக விருந்து வைத்தார்” என்று கிருஷ்ணாவின் தாயார் தெரிவித்தார்.