(செ.தேன்மொழி)

சுங்க வரி வருமானம் கடந்த 5 மாத்தில் 30 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

2018 ஆம் ஆண்டுக்கான வரி அறவீட்டு வருமானத்தில் 54 சதவீத வருமானம் சுங்க வரி அறவீட்டின் மூலமே கிடைக்கப் பெற்றது. அதற்கமைய 912 பில்லியன் ரூபாவை சுங்க வரியீட்டு தினைக்களமே பெற்றுக் கொடுத்தது. இந்த சுங்க வரி வருமானத்திலிருந்து ஆயிரத்து 65 பிள்ளியன் ரூபாவை நாங்கள் எதிர்பார்த போதும், அந்த தொகையில் 153 பில்லியன் வீழ்ச்சியடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை சுங்க திணைக்களத்தின் நடைமுறை செயல்களில் மாற்றங்களை ஏற்படுத்தவும், புதிய சட்ட மூலங்களை அறிமுகப்படுத்தவும் உத்தேசித்துள்ளதாகவும் நிதியமைச்சு அறிவித்துள்ளது.