போலி முகநூலுக்கு எதிராக நகரசபை உறுப்பினர் லரீப்பினால் முறைப்பாடு பதிவு ஒன்று செய்யப்பட்டுள்ளது .

அண்மையில் நாட்டின் ஏற்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பின் திட்டமிட்ட வகையில் இனங்களுக்கிடையில் இனவாதத்தை தூண்டி இனங்களுக்கிடையில் பிரிவினை ஏற்ப்படுத்தும் நோக்கில் செயற்படும் போலி முகநூலுக்கு எதிராகவே நகரசபை உறுப்பினர் லரீப்பினால் இவ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்லாமியர்களின் பெருநாள் தினத்தன்று தமிழ் சகோதரர்கள் இஸ்லாமியரின் இல்லங்களுக்கு சென்று பெருநாள் கொண்டாட்டத்தில். கலந்து கொண்டதனை ஜீரணிக்க முடியாத சில இனவாத சக்திகள். வவுனியாவில் இனவாதத்தையும், மதவாதத்தையும் போலிப்பிரச்சாரம் ஊடாக மக்களை பிழையாக வழிநடாத்தி ஒற்றுமையாகவும் சகோதரத்துடனும், வாழும் தமிழ் முஸ்லிம் உறவினை பிரித்து தங்களது குறுகிய இலக்கை அடைய முனையும்.

 சிலர் அவர்களின் முகத்தினை திறைமறைவில் வைத்துக் கொண்டு போலி முகநூல் ஊடாக பெருநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் ஊடாக நண்பர்களையும் . சமூக சேவையாளர்களையும் , அவர்களின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்ப்படுத்தும் வகையில் போலி முநூல் ஊடாக பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இவர்களை சட்டத்தின் ஊடாக அடையாளம் கண்டு இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு ஒற்றுமையாக வாழும் சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்ப்படுத்தும் நோக்கிலே அண்மையில்  வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபரை சந்தித்து இனவாதத்தை தூண்டுபவர்களுக்கு எதிராக இம் முறைப்பாட்டினை  பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.