உல­க­ளா­விய ரீதியில் 70 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான மக்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்

Published By: R. Kalaichelvan

20 Jun, 2019 | 10:26 AM
image

உல­க­ளா­விய ரீதியில் போரால் இடம்­பெ­யர்ந்­த­வர்கள் தொகை கடந்த வரு­டத்தில் 70 மில்­லி­ய­னாக அதி­க­ரித்­துள்­ள­தாக  ஐக்­கிய நாடுகள் அக­திகள் முகவர் நிலை­யத்தால் நேற்று புதன்­கி­ழமை புதி­தாக வெளியி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 கடந்த வரு­டத்தில் 70.8 மில்­லியன் பேர் இடம்­பெ­யரும் நிர்ப்­பந்­தத்­திற்குள்­ளா­கி­யுள்­ளனர் எனவும் அதற்கு முந்­திய வரு­டத்தில் இடம்­பெ­யர்ந்­த­வர்கள் தொகை­யுடன் ஒப்­பி­டு­கையில் அந்த வரு­டத்தில் இடம்­பெ­யர்ந்­த­வர்கள் தொகையில்  2.3 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான அதி­க­ரிப்பு இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் ஐக்­கிய நாடுகள் அக­திகள் முகவர் நிலை­யத்தால்  வெளியி­டப்­பட்ட  வரு­டாந்த  உல­க­ளா­விய போக்­குகள் அறிக்­கையில்  சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இந்த இடம்­பெ­யர்ந்த அக­திகள் தொகை­ யா­னது 30 வரு­டங்­க­ளுக்கு முன்­பி­ருந்­ததை விடவும் இரு மடங்­காக அதி­க­ரித்­துள்­ளது. உல­க­ளா­விய ரீதியில் தின­சரி சரா­ச­ரி­யாக 37,000 புதிய இடம்­பெ­யர்­வுகள் இடம்­பெற்று வரு­வ­தாக அந்த அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்ளது.

இது போர், மோதல்கள், துன்­பு­றுத்­தல்கள் என்­பன­வற்­றி­லி­ருந்து பாது­காப்பு தேவை­யான மக்­க­ளது தொகையில் நீண்ட  கால ரீதியில் அதி­க­ரிக்கும் போக்கு காண ப்­ப­டு­வதை மேலும் உறு­திப்­ப­டுத்­து­வ­தாக  உள்­ளது" என ஐக்­கிய நாடுகள் அக­திகள் உயர்ஸ்­தா­னிகர் பிலிப்போ கிரான்டி தெரி­வித்தார்.

வெனி­சு­லா­வி­லான நெருக்­க­டிகள் தொட ர்­பான தக­வல்கள் முழு­மை­யாக வெளிப்­ப­டுத்­தப்­ப­டாத நிலையில் மேற்­படி இடம்­பெ­யர்ந்த அக­தி­களின் தொகை மதிப்­பி­டப்­பட்­டதை விடவும் அதி­கமாக  இருப்­ப­தாக தோன்­று­வ­தாக அவர் கூறினார்.

இவ்­வாறு இடம்­பெ­யர்ந்­த­வர்­களில்  தாய் ­நாட்­டி­லான  மோதல்கள், போர் மற்றும் துன்­பு­றுத்­தல்கள் கார­ண­மாக  நாட்டை விட்டு வெளியே­றி­ய­வர்கள், தாம் பிறந்த நாட்டை விட்டு வெளியேறி  சர்­வ­தேச பாது­காப்பின் கீழ் இருக்கும் நிலையில்  அகதி அந்­தஸ்து வழங்­கப்­ப­டாத  புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்கள் மற்றும் உள்­நாட்­டுக்குள் இடம்­பெ­யர்ந்­த­வர்கள் என 3 பிரி­வினர் உள்­ள­டங்­கு­வ­தாக தெரி­வித்த பிலிப்போ கிரான்டி, கடந்த ஆண்டில் உல­க­ளா­விய அக­திகள் தொகை 25.9 மில்­லி­ய­னா­கவும் புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்கள் தொகை 3.5 மில்­லி­ய­னா­கவும்  உள்­நாட்டில் இடம்­பெ­யர்ந்­த­வர்கள் தொகை 41.3 மில்­லி­ய­னா­கவும் உயர்ந்துள்­ள­தாக  கூறினார்.

உல­க­ளா­விய அனைத்து அக­திகள் தொகையில்  மூன்றில் இரண்டு பகுதியி னர் சிரியா, ஆப்­கா­னிஸ்தான், தென் சூடான், மியன்மார் மற்றும் சோமா­லியா ஆகிய நாடு­களைச் சேர்ந்­த­வர்­க­ளாவர்.

சிரி­யா­வி­லி­ருந்தே அதி­க­ள­வான அக­திகள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். அந்­நாட்­டி­லி­ருந்து 6.7 மில்­லியன் பேர் இடம்­பெ­யர்ந்­துள்ள அதே­ச­மயம் அந்­நாட்­டிற்கு அடுத்த இடத்­தி­லுள்ள  ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து 2.7 மில்­லியன் பேர்  இடம்­பெ­யர்ந்­துள்­ளனர். 2018 ஆம் ஆண்டில் 92,400 அக­திகள்  மட்­டுமே மீளக் குடி­ய­மர்த்­தப்­பட்­டு ள்­ளனர்.  இது மீளக்குடி­ய­மரக் காத்­தி­ருப்­ப­வர்கள் தொகையில் 7 சத­வீதம் மட்­டு­மே­யாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52