புளூமென்டல் வீதியின் போதி சந்தியிலிருந்து புனித ஜேம்ஸ் சந்தி வரையிலான வீதியில் நீர் குழாய் திட்டத்துக்காக பின்வரும் நாட்களிலும் நேரங்களிலும் வீதி மூடப்பட்டிருக்குமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கால அட்டவணை பின்வருமாறு,

01. 2019.06.21 ஆம் திகதி இரவு 10 மணி தொடக்கம் 2019.06.24 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரையில் 

02. 2019.06.28 ஆம் திகதி இரவு 10 மணி தொடக்கம் 2019.07.01 ஆம் திகதி வரையில் அதிகாலை 5 மணி வரையில் 

மேலே குறிப்பிடப்பட்ட காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.