இன்று நள்ளிரவிலிருந்து முன்னெடுக்கப்படவிருந்த ரயில்வே திணைக்கள ஊழியர்களின் பணிப் பகீஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாட்டை நீக்குதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவிலிருந்து ரயில்வே தொழிற்சங்கங்கள் ஆரம்பிக்கவிருந்த பணிப்பகீஷ்கரிப்பு வைவிடப்பட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. 

ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சில இரண்டு நாள் பணிப் பகீஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு ஏற்கனவே தீர்மானித்திருந்தன. இந்நிலையில் தொழிற்சங்கங்களின் கோரிக்கை தொடர்பில் நிதியமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் அசோக அபயசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காவிடத்து மீண்டும் பணிப் பகீஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.