வவுனியாவில் இடம்பெற்ற வடமாகாண ஆளுனர் உடனான சந்திப்பின் போது வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக வடமாகாண சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவனுடன் வடமாகாண சுகாதார தொண்டர்கள் இன்று கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் தலைவி சிவகரன் சுகந்தி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஆளுனருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது எமது சுகாதார தொண்டர்களில் 45 வயதினை தாண்டியவர் பல பேர் வடமாகாணத்தில் உள்ளனர். 

அந்த அடிப்படையில் ஆளுனர் எமக்கு சாதகமான பதிலேயே எமக்கு வழங்கியுள்ளார். ஏற்கனவே சுகாதார தொண்டர்களாக பணியாற்றவர்கள் என்ற ஒர் காரணத்தினால் வயதெல்லையினை 50வயது வரை நீடிக்கலாம் என தெரிவித்திருந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நேர்முகதேர்வு இடம்பெற்றது. அந்த நேர்முக தேர்வின் புள்ளி அடிப்படையில் தெரிவுகள் இடம்பெறும் என ஆளுனர் தெரிவித்திருந்தார். எனினும் இதில் சுகாதார தொண்டர்கள் யாராவது விடுபடுபவார்களாகவிருந்தால் சம்பந்தபட்டவர்களை தங்களுடன் கலந்துரையாடுமாறும் எமக்கு சாதகமான பதிலேயே வழங்கியிருந்தார். இறுதி முடிவுக்காக வடமாகாண சுகாதார தொண்டர்கள் அனைவரும் காத்திருக்கின்றோம் என தெரிவித்தார்.