நடிகர் அரவிந்த்சாமி நாயகி துணையில்லாமல் தனியாக ‘புலனாய்வு’ செய்கிறார்.

‘செக்க சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து அரவிந்த்சாமி நடிப்பில் தயாராகவிருக்கும் புதிய திரைப்படம் ‘புலனாய்வு’. இந்த படத்தில் புலனாய்வு அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கும் அரவிந்த்சாமிக்கு ஜோடி இல்லை. இவருடன் இயக்குனரும், நடிகருமான அமீர், ஜோன் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 20ஆம் திகதி முதல் சென்னையில் தொடங்குகிறது. 

ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற அடல்ட் ஹாரர் கொமடி படங்களையும், கஜினிகாந்த் என்ற பேமிலி எண்டர்டெயினர் படத்தையும் இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் இந்தப் படம் தயாராகவிருக்கிறது. இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதனிடையே நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில் கள்ளப்பார்ட், சதுரங்கவேட்டை= 2, வணங்காமுடி, நரகாசுரன் ஆகிய படங்கள் முடிவடைந்து விரைவில் வெளியாகவிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.